தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவால் பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் உயிரிழப்பு! - கரோனா செய்திகள்

வேலூர்: காட்பாடி பிரம்மபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் கரோனா தொற்றால் இன்று (ஏப். 30) உயிரிழந்தார்.

Headmaster of a school who died of corona infection in vellore
Headmaster of a school who died of corona infection in vellore

By

Published : Apr 30, 2021, 9:19 PM IST

வேலூர் காட்பாடியில் உள்ள கீழ்முட்டுக்கூர் ரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் தயாளன் (57). இவரது மனைவி உமா. இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஒருவர் திருமணமாகி ஜெர்மன் நாட்டில் வசித்து வருகிறார். மற்றொருவர் சென்னையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.

தயாளன் பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்ரல். 29) வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று (ஏப். 30) காலை உயிரிழந்தார். இவரது மனைவி உமா காங்கேயநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தலைமை ஆசிரியர் தயாளன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details