தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 28, 2020, 1:13 PM IST

Updated : Apr 28, 2020, 7:11 PM IST

ETV Bharat / city

வெயில் கொடுமையைத் தனித்த ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

கடுமையான கோடை வெயிலின் தாக்கத்திற்கு நடுவே கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வேலூர், கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டி மழை
வேலூர், கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டி மழை

கோடைக்காலம் தொடங்கியது முதல், இந்த வருடமும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் வழக்கம்போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர, பாதுகாப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், சற்றும் குறையாமல் இருந்து வரும் வெயிலின் தாக்கத்தால், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பொதுமக்கள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள சூளகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வேலூர், கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டி மழை

குறிப்பாக சூளகிரி, சின்னார் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்ததைத் தொடர்ந்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் அரை மணி நேரம்வரை பெய்த இந்த மழையால் வெப்பம் தனிந்து குளிர் காற்று வீசியதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூர், கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டி மழை

இதேபோல், தமிழ்நாட்டில் வருடா வருடம் வெப்பநிலை அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் ஒன்றான வேலூரில் கடந்த மாதம் உச்சபட்சமாக 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் பதிவானது.

ஆனால் கடந்த மூன்று நாள்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாட்டின் சில இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலை காட்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது.


இதையும் படிங்க:
ஊரடங்கு, மழையால் வீணாகும் நெல் மூட்டைகள் - விவசாயிகள் வேத
னை

Last Updated : Apr 28, 2020, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details