தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கணவருடன் சேர்த்து வைக்க கோரி வனத்துறை அதிகாரியின் மனைவி மனு! - Forest ranger wife petittion

வேலூர்: கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என வனத்துறை அதிகாரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

முன்னாள் வனத்துறை அதிகாரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு

By

Published : May 6, 2019, 4:10 PM IST

வேலூர் மாவட்டம் ஆற்காடு புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா, தமிழக வனத்துறையில் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் வனச்சரகராக பணியாற்றி வந்தார். இவர் லஞ்ச புகாரில் சிக்கி சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ராஜாவின் மனைவி மாலதி இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கப் போவதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வேலூர் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டனர். அப்போது தனது இரண்டு மகன்களுன் மாலதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து விசாரணையில் தனது கணவர் இரண்டாவது திருமணம் முடித்துள்ளார். இதுதொடர்பாக மனு அளிக்க வேண்டும் என்றார் மாலதி. இதையடுத்து உள்ளே சென்ற மாலதி மாவட்ட ஆட்சியர் ராமன் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளர் தாட்சாயினியிடம் மனு அளித்தார்.

முன்னாள் வனத்துறை அதிகாரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வனச்சரகராக பணியாற்றி வந்த எனது கணவர் ராஜா, எனக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தற்போது அவர் பணம் நகைகளை எல்லாம் இரண்டாவது மனைவிடம் கொடுத்து வைத்து என்னையும் எனது மகன்களையும் கவனிக்கவில்லை. எனவே தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details