வேலூர்:குடியாத்தம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இங்கு புற நோயாளிகளாக தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே மருத்துவமனை அவசர சிகிச்சை புற நோயாளிகள் பிரிவில் ரசீது கொடுக்கும் தற்காலிக ஊழியர் ஒருவர், நோயாளியிடம் லஞ்சம் கேட்டுப் பெறும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.