தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேலூரில் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்! - நாடாளுமன்றத் தேர்தல்

வேலூர்: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்த்தில் கணக்கில் வராத மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்

By

Published : Mar 15, 2019, 10:25 PM IST

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறதையொட்டி வேலூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 3473 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்துள்ளார். இதில் 362 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேப்போல் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 39 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக வேலூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்யும் படி அதிகாரிகள் இந்த குழுவிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாக்கம் என்ற இடத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக பாஸ்கரன் என்பவர் தனது காரில் மூன்று லட்ச ரூபாயை எடுத்துச் சென்றார். அது தொடர்பான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், கணக்கில் வராத பணமாக கருதி அப்பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். மேலும், கைப்பற்றப்பட்ட மூன்று லட்ச ரூபாய் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி சாந்தியிடம் ஓப்படைத்தனர்


வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக ரூ 3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் சோதனைகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details