வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் பகுதியில் நெக்னாமலையின் அடிவார பகுதிகளில் அதிகளவு மான்கள் வாழ்ந்துவருகின்றன.
இந்நிலையில், தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று அப்பகுதியில் உள்ள வெங்கட் என்பவருக்கு சொந்தமான 100 அடி விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிணற்றில் விழுந்து பலியான மான் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மானின் உடலை மேலே கொண்டுவந்தனர்.
பின்னர் அந்த மானை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும் வனப்பகுதியிலிருந்து அதிகளவு மான்கள் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் ஊருக்குள் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மானை கட்டி இழுக்கும் வனத்துறையினர்