வேலூர் மாவட்டம் காட்பாடி பேருந்து நிறுத்தத்தில் காங்கேயநல்லூரை சேர்ந்த ஏழுமலை(70) என்ற முதியவர் படுத்து கிடப்பார். அவருக்கு அந்தவழியாக செல்பவர்கள் எதாவது உணவு கொடுத்து வந்தனர்.
ஆதரவற்ற முதியவரின் பிணத்தை எடுக்க மறுத்த மாநகராட்சி அலுவலர்கள்! - ஆதரவற்ற முதியவர்
வேலூர்: காட்பாடியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவரின் பிணத்தை எடுக்க மாநகராட்சி அலுவலர்கள் மறுத்துள்ளனர்.
ஆதரவற்ற முதியவரின் பிணத்தை எடுக்க மறுத்த மாநகராட்சி அதிகாரிகள்!
இந்நிலையில் இன்று ஏழுமலை பஸ்டாப்பிலேயே இறந்துள்ளார். இதனையறிந்த அந்தப்பகுதி மக்கள் வேலூர் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, உடலை அடக்கம் செய்தனர். முதியவர் இறந்தது குறித்து தகவல் கொடுத்தும் மாநகராட்சி அலுவலர்கள் மனித நேயமில்லாமல் அலட்சியமாக இருந்தது அந்தப் பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.