தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கதிர் ஆனந்துக்கு கரோனா தொற்று உறுதி

துரைமுருகனின் மகன் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் சகோதரர் ஆகியோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் எம்பிக்கு கரோனா தொற்று உறுதி !
வேலூர் எம்பிக்கு கரோனா தொற்று உறுதி !

By

Published : Apr 10, 2021, 6:21 PM IST

வேலூர் மாவட்டம், காட்பாடி - காந்திநகரில் வசித்து வரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கடந்த 8ஆம் தேதி சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு சென்னையில் ரெலா மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் துரைமுருகனின் மகனும் வேலூர் திமுக மக்களவை உறுப்பினருமான கதிர்ஆனந்த் மற்றும் துரைமுருகனின் சகோதரர் துரை சிங்காரம் ஆகிய இருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இருவரும் சென்னை - கொரட்டூரில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துரைமுருகனின் வீடு உள்ள காட்பாடி - காந்திநகர் பகுதியில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 'சாதியத்தை அறுத்தெறிந்த கர்ணனின் வாள்' - அடுத்தடுத்து குவியும் பாராட்டுகள்

ABOUT THE AUTHOR

...view details