காட்பாடி தொகுதிக்குட்பட்ட குப்பத்தா மோட்டூர் பகுதியில் நேற்று (ஏப். 04) இரவு திமுக பிரமுகர் கோபி என்பவர் பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை அடுத்து, பறக்கும் படையினர் நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது, கோபியிடமிருந்து 56 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் திமுக துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
துரைமுருகன் மீது வழக்குப்பதிவு! - வழக்குப்பதிவு
வேலூர்: திமுக பொதுச்செயலாளரும் அக்கட்சியின் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் மீது பணப்பட்டுவாடா புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
dmk
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கோபி மீது மூன்று பிரிவுகளின் கீழ் திருவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளரும் அக்கட்சியின் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் மீது, 171E பிரிவின் கீழ் காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கே.என். நேரு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!