தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையில் தேங்காய் உடைத்து பூஜை.. நூதன போராட்டம்... - BJP protest in Vellore to repair road

வேலூர்: சாலைகளை சரி செய்ய வேண்டி சாலையில் தேங்காய் உடைத்து பூஜை செய்து நூதனமான முறையில் பாஜகவினரும் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் சரி செய்யுமாறு போராட்டம்
சாலையில் சரி செய்யுமாறு போராட்டம்

By

Published : Dec 9, 2020, 5:44 PM IST

வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட சங்கரன் பாளையம் பகுதியில் உள்ள 33 ஆவது வார்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிகளில் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் நீர் புகுந்துவிடுகிறது. சாலைகளிலும் நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுத்தப்பாடில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சாலைகளை சரிசெய்ய வேண்டி, அப்பகுதி மக்களும் பாஜகவினரும் இணைந்து சாலையில் தேங்காய் உடைத்து பூஜை செய்து நாற்று நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details