தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

An earthquake in Vellore: வேலூர் அருகே நிலநடுக்கம்

வேலூர் மாவட்டத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

An earthquake in Vellore: வேலூர் அருகே நிலநடுக்கம்
An earthquake in Vellore: வேலூர் அருகே நிலநடுக்கம்

By

Published : Dec 23, 2021, 4:16 PM IST

Updated : Dec 23, 2021, 5:52 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'வேலூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 3.14 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது' என்று கூறியுள்ளது.

மேலும் இந்த நில அதிர்வு வேலூருக்கு மேற்கு - வடமேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதனால் வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Malpractice: தொலைதூரக் கல்வி தேர்வு முறைகேடு - ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை

Last Updated : Dec 23, 2021, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details