தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் - pollachi

திருச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருச்சியில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

By

Published : Mar 15, 2019, 7:20 PM IST

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் பானுமதி தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை செய்ய உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்திடவும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனா்.

சிபிஐ விசாரணையை திரும்பப் பெற வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்களிடம் புகார் பெறுதல், சாட்சிகள், விசாரணை, ஆவணங்கள் கைப்பற்றுதல் போன்ற விவரங்களில் குற்றவாளியின் பெயர், விபரங்களை தவிர ஏனைய விபரங்களை ரகசியமாக காத்திட வேண்டும் எனவும், புலன் விசாரணைக் குழுவில் திறமையான பெண் காவல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் எனவும், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பாலியல் வன்கொடுமை காட்சிகள், ஆபாசக் காட்சிகள் வெளியாவதை உடனடியாக தடை செய்யவும், இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை விரைவாக முடித்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details