திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சாலையில் சி.கே.பி. கார்டன் என்ற குடியிருப்புப் பகுதி உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி (40). இவர் சிறிது காலமாக தனது நண்பர்களுடன் இணைந்து மாட்டுப் பண்ணை தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்.
இந்நிலையில் பண்ணையை பார்ப்பதற்காக சென்ற சுடலைமணி, அங்கேயே தங்கிவிட்டு, மறுநாள் காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் பணம், கொலுசு, தீபாவளிக்கு எடுத்த புத்தாடைகள், ஐந்து மலேசியா கைக்கடிகாரங்கள், பூஜை அறையிலிருந்த ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
பணம், புத்தாடைகள் திருட்டு இது குறித்து சுடலைமணி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் தொல்லியல் மாணவிகள் நிகழ்த்திய மற்றொரு புரட்சி