தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சியில் பூட்டியிருந்த வீட்டில் 40 பவுன் நகை திருட்டு - Trichy theft news

திருச்சியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகையை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பூட்டியிருந்த வீட்டில் நகை திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் நகை திருட்டு

By

Published : Apr 27, 2021, 4:07 PM IST

திருச்சி கருமண்டபம், ஜெய நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜயீத். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவருகிறார். ஐந்து மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் திருச்சிக்கு வந்தார்.

இந்நிலையில், தனது மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு ஏப்ரல் 25ஆம் தேதி அழைத்துச் சென்றார். பின்னர் இன்று (ஏப். 27) காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கைரேகை நிபுணர்கள்

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 சரவன் நகை, மற்றும் பணம் திருடு போனது தெரியவந்தது.

பூட்டியிருந்த வீட்டில் திருட்டு

இது தொடர்பான புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details