கரூர் பரமத்தி காவல் நிலையம் 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நூற்றாண்டு கடந்து செயல்பட்டுவருகிறது. இதைச் சிறப்பிக்கும் வகையில் இன்று பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக டிஐஜி கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார். இதையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.
ரவுடிகள் கலாசாரம் ஒழிக்கப்பட்டுள்ளது! திருச்சி டிஐஜி - திருச்சி
கரூர்: மேற்கு மண்டலத்தில் ரவுடிகள் கலாசாரத்தை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகக் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கரூரில் காவல் நிலையம் நூற்றாண்டு விழா
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், "திருச்சி காவல் சரகத்தைப் பொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். அதேபோல் மணல் திருட்டு, மண் வளங்களைச் சுரண்டும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.