தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவல் துறைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம்; மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு - state human rights commission

தாயையும், மனைவியையும் தாக்கி நகைப் பறித்ததாக அளித்தப் புகாரில் காவல் துறையின் அலட்சிய நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறைக்கு ஒன்றரை லட்ச ரூபாய் அபராதம்; மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
காவல்துறைக்கு ஒன்றரை லட்ச ரூபாய் அபராதம்; மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

By

Published : May 13, 2022, 10:15 PM IST

Updated : May 14, 2022, 9:05 AM IST

திருச்சியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு அளித்த புகாரில், தனது வீட்டிற்குள் நுழைந்து தாய் மற்றும் மனைவியை தாக்கி 50 கிராம் தங்கத்தாலி சங்கிலியைப் பறித்து சென்ற பெண்ணுக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டு மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யவில்லை.

சந்தேகிக்கப்படும் பெண் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்த பின்னரே சந்தேகிக்கப்படும் நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், முதல் தகவல் அறிக்கையில் தவறான தகவல்களையே காவல் துறை பதிவு செய்துள்ளது’ எனப்புகாரளித்தார்.

இந்தப் புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், புகார் அளித்ததும் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, புகார் அளித்த கலைச்செல்வனுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயை இழப்பீடாக எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த தொகையை வழங்க திருச்சி மண்ணச்சநல்லூர் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் நடேசன், புலிவலம் காவல் நிலைய அப்போதைய உதவி ஆய்வாளர் லோகநாதன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் ஆகியோரிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்க வேண்டுமெனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Last Updated : May 14, 2022, 9:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details