தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்? - திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

திருச்சி: தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் மத்திய அரசின் என்.ஆர்.சி. (தேசிய குடிமக்கள் பதிவேடு) சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது பரிசீலனையில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Resolution against NRC in Tamil Nadu?  Consideration to Resolution against NRC in Tamil Nadu?  Resolution against NRC in Tamil Nadu?  Edapadi Palaniswamy PressMeet In Trichy  தமிழ்நாட்டில் என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்?  திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி  முக்கொம்பு அணை உடைப்பு, புதிய தடுப்பணை, எடப்பாடி பழனிசாமி, திமுக தோல்வி பயம், பிரசாந்த் கிஷோர், தேமுதிக மேலவை உறுப்பினர் பதவி, பிரேமலதா விஜயகாந்த்
Resolution against NRC in Tamil Nadu?

By

Published : Feb 27, 2020, 4:39 AM IST

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உடைந்தது. இதற்கு பதிலாக தற்காலிக ஏற்பாடுகள் மூலம் உடைப்பு சரிசெய்யப்பட்டது. சேதமடைந்த தடுப்பணைக்கு பதிலாக அருகில் ரூ.387.60 கோடி செலவில் புதிதாக தடுப்பணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் தடுப்பணை கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

இதன்படி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தடுப்பணை கட்டுமானப் பணி நிறைவடைய வேண்டும். இந்தப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டுமான பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கினார்கள். அதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
“முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வலுவிழந்து உடைந்த பாலத்திற்கு மாற்றாக புதிய தடுப்பணை அறிவிக்கப்பட்டு ரூ.387.60 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது.

தற்போது 35 விழுக்காடு பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. பணிகள் விரைந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதனால் திட்டமிட்டபடி பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமான பணிகள் காரணமாக விவசாயம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை தெளிவாக வழங்கியுள்ளார்கள். அதனால் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறிக்கொண்டே தான் இருக்கவேண்டும்.

ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. நீர் வழங்காமலும் இருக்க முடியாது. நீரை திருப்பி விடவும் முடியாது. டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதோ அந்தந்த பகுதிகள் அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் மட்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரியலூர் போன்ற மாவட்டங்களை சேர்த்தால் அங்கு ஏற்கனவே செயல்படும் தொழிற்சாலைகள் பாதிக்கும். அதனால் அந்த வாக்குறுதிகள் சேர்க்கப்படவில்லை. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டு இத்தகைய முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்து விட்டது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது.

பத்து ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். இந்த வகையில் 2003 ஆம் ஆண்டு என்பிஆர் சட்டத்தை பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. பாஜக அரசில் திமுக கூட்டணியில் இருந்தபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்து 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. 2011 ஆம் ஆண்டு திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. அப்போது தான் என்பிஆர் கொண்டுவரப்பட்டது.

தற்போது அதில் மூன்று கேள்விகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்று மொழி, இரண்டாவதாக பெற்றோர் பிறப்பிடம், மூன்றாவதாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த மூன்று கேள்விகளும் கட்டாயம் கிடையாது. விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது” என்றார்.

திமுகவுக்கு தோல்வி பயம்
தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோரை திமுக தேர்தல் பணிக்காக நியமனம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் கூறுகையில், “நாங்கள் மக்களை நம்பி செல்கிறோம். இதுவரை இப்படியா தேர்தல் நடந்தது. கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர்தான் தேர்தலை நிர்ணயம் செய்தார்கள். அதை பொறுத்துதான் தேர்தல் முடிவும் இருக்கும். ஒரு பொருளுக்கு ஏஜென்சி அளிப்பது போல் உள்ளது. ஏஜென்சி மூலம் வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாது” என்றார்.

தமிழ்நாட்டில் என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

தேமுதிக விவகாரம்

முதலமைச்சர் தொடர்ந்து பேசுகையில், “ராஜ்யசபா தேர்தலில் யார்? யார்? போட்டியிடுவது என்பது குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்தும் தலைமை கழகம் முடிவு செய்யும். சீட்டு கேட்பதற்கு அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. அனைத்தையும் தலைமை கழகம் தான் முடிவு செய்யும்” என்றார்.

என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்

என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்றக் கேள்விக்கு, “குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசின் பரிசீலனையில் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:'கரிகாலச் சோழனுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிதான்' - ஆர்.பி. உதயகுமார் புகழ்மாலை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details