திருச்சி மாவட்டம் கல்லணை அருகே உள்ள பனையபுரத்தில் டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக, அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், அங்கு விரைந்த காவலர்கள் மூன்று பெண்கள் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சியில் லாரி மோதி 3 பெண்கள் உயிரிழப்பு - trichy lorry accident
திருச்சியில் லாரி மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
three-women-killed-in-trichy-road-accident
இதுகுறித்து போலீசார் தரப்பில், "கும்பகோணத்தை சேர்ந்த 8 பேர் டாட்டா ஏஸ் வாகனத்தில் செல்லம்பட்டியில் குலதெய்வ கோயிலை நோக்கி புறப்பட்டனர். அப்போது, பனையபுரம் அருகே வாகனம் சென்றுக்கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மீன் வண்டி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு