தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெடி விபத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு - அரசு மருத்துவமனை

திருச்சி:  குலதெய்வ கோயிலுக்கு வழிபாட்டிற்காக வந்தபொழுது நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கிய  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

small boy died in crackers blast
small boy died in crackers blast

By

Published : Sep 14, 2020, 11:30 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் சசிதரன் (7). திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு தட்சிணாமூர்த்தி குடும்பத்தோடு இன்று(செப் 14)வந்துள்ளார். அப்போது தோரண வெடி வெடிக்கப்பட்டது. இந்த வெடி விபத்தில் சிறுவன் சசிதரன் சிக்கி காயம் அடைந்தான்.

இதையடுத்து படுகாயமடைந்த சிறுவனை, குடும்பத்தினர் மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் குடும்பத்தினர் சிறுவனின் உடலை இறுதிச்சடங்கு செய்வதற்காக வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த உப்பிலியாபுரம் காவல் துறையினர், பரமத்திவேலூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்

ABOUT THE AUTHOR

...view details