தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் - பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Oct 5, 2021, 3:11 PM IST

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அக்.2ஆம் தேதி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தியின் உருவப்படத்திற்கு, மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அவர்,"நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளையும் (அக். 6), வருகிற 9 ஆம் தேதியும் நடைபெறுகிறது. அதனால் நாளை முதல் நான்கு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:பள்ளிகளுக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details