திருச்சி மாவட்டம் கருமலை அருகேயுள்ள வெள்ளகுளத்துப்பட்டியைச் சேர்ந்த சோக்குமுத்து மகன் முத்துக்கண்ணு (55) இன்று புத்தாநத்தம் கடை வீதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
திருச்சியில் லாட்டரி விற்பனை: ஒருவர் கைது - Trichy district news
திருச்சி: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனைசெய்த ஒருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை
இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளர், முத்துக்கண்ணுவைப் பிடித்து பரிசோதித்ததில், அவரிடமிருந்து லாட்டரி
டிக்கெட்கள், செல்போன், 260 ரூபாய் உள்ளிட்டவை பறிமுதல்செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.