திருச்சிராப்பள்ளி: அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி செயலரும், ஒன்றிய கவுன்சிலரும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், அடிப்படை வசதிகளை செய்துதருவதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
கருமலையைடுத்த மாங்கனாபட்டி வீரமலைகளத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதிக்குச் சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதி செய்து தரக் கோரி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணை மறைத்த பக்தி: தன்னை தானே குழிக்குள் புதைத்துக் கொண்ட பெண்!
இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகம் செவி சாய்க்காததால் கொந்தளித்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் அவ்வழியே வந்த அரசுப் பேருந்தை மறித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.