தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாரம்பரிய மருத்துவர்களை அங்கீகரிக்க வேண்டும் - சித்த மருத்துவர்கள் வலியுறுத்தல்! - பாரம்பரிய மருத்துவர்களை அங்கிகரிக்க வேண்டும்

திருச்சி: பாரம்பரிய மருத்துவர்களுக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று சித்த மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

recognize traditional doctors

By

Published : Nov 15, 2019, 10:31 PM IST

அகில இந்தியச் சித்த மருத்துவ சங்கம், அகில இந்திய மாற்று மருத்துவ பயிற்சி நிறுவனம் சார்பில் திருச்சியில் அக்குபஞ்சர் தினமும், பாரம்பரிய மருத்துவர்களுக்காகச் சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு பாராட்டு விழாவும் நடந்தது. அகில இந்தியச் சித்த மருத்துவ சங்க மாநில தலைவர் மருத்துவர் சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் காமாட்சி புரி ஆதீனம் சிவனகேஸ் வர சுவாமிகள், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பாரம்பரிய மருத்துவத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து இரு அவைகளிலும் அதை நிறைவேற்றி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடன் 10 நிமிடங்கள் மாணவர்கள் குடிநீர் அருந்த ஏற்பாடு' : அமைச்சர் செங்கோட்டையன்!

பாரம்பரியம் மற்றும் சித்த மருத்துவர்களைக் காப்பாற்றும் வகையில் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாரம்பரிய மருத்துவர்களை அங்கிகரிக்க வேண்டும் - சித்த மருத்துவர்கள் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details