தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்! - 100 சதவீதம்
திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வெப்பத்தின் தாக்குதலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவையை 100 சதவீதம் அரசு உறுதி செய்ய வேண்டும். அதைத்பூர்த்தி செய்யமுடியாத அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கை மற்றும் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். தற்போது உள்ள ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். 2004-2006ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இருமொழி திட்டமே தொடர வேண்டும்” என மகேந்திரன் வலியுறுத்தினார்.