தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிராமத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! - Petrol Bomb

திருச்சி: கிராமத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மூன்று சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Petrol Bomb Thrown up Village President House In Trichy
Petrol Bomb Thrown up Village President House In Trichy

By

Published : Sep 4, 2020, 9:15 PM IST

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள செல்வபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (45). இவர் காந்திநகர் கிராமத்தின் தலைவராக உள்ளார். காந்திநகர் 1ஆம் தெருவைச் சேர்ந்த சிங்காரவேலு மகன் சஞ்சய்(17).

காந்திநகர் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் சஞ்சய் சுற்றி திரிந்துள்ளார். இதைக் கண்ட கார்த்திக் சஞ்சயை கண்டித்துள்ளார்.

இதையறிந்த அவரது நண்பர்களான காந்தி நகரைச் சேர்ந்த கிரண் (17), கக்கன் காலனியைச் சேர்ந்த நாகராஜ் (17), சுருளி கோயில் தெருவை சேர்ந்த பிரமோத் (17) ஆகிய மூவரும் நேற்று இரவு கார்த்திக் வீட்டில் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

அதோடு, பெட்ரோல் குண்டையும் வீசியுள்ளனர். அப்போது, பெட்ரோல் குண்டு வெடித்ததில் பயங்கர சத்தம் கேட்டது. இதில் கார்த்திக் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. இது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இது குறித்து கார்த்திக் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் மூவரையும் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details