தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 27, 2019, 1:10 PM IST

ETV Bharat / city

திருச்சியில் மொத்தம் 1,268 மூன்றாம் கண்கள்!

திருச்சி: ஸ்ரீரங்கம் பகுதியில் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் நவீன கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.

திருச்சியில் மொத்தம் 1,268 மூன்றாம் கண்கள்!
திருச்சியில் மொத்தம் 1,268 மூன்றாம் கண்கள்!

திருச்சி மாநகரில் சமூக விரோத செயல்கள், குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்தை சீர் செய்யவும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் சாலையோரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை அமைச்சர் வெல்லமண்டி நடராசன் திறந்து வைத்தார்

இந்த வகையில் ஸ்ரீரங்கம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை கண்காணிப்பதற்காக கட்டுப்பாட்டு அறை இன்று திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம், காவிரி பாலம், மாம்பழச்சாலை சிக்னல் முதல் அம்மா மண்டபம் வழியாக ராஜகோபுரம் வரை, ராஜகோபுரம் முதல் ரங்கா ரங்கா கோபுரம் வரை உள்ள பகுதிகளில் ரூ.65 லட்சம் செலவில் 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதற்காக இந்த நவீன கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் திறந்து வைத்தனர். திருச்சி மாநகரில் இதுவரை மொத்தம் 1,268 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மட்டும் 86 சதவீத வழக்குகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:

கூகுள் மேப்புடன் சிசிடிவி கேமரா பொருத்திய காவல் துறை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details