திருச்சி:மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கத்தில், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் என்னும் நிலத் தரகர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், 'நிலத் தரகர்கள் நலச்சங்கம் சார்பில் நியமன கோரிக்கையை வைத்துள்ளார்கள், அதனை நாங்கள் நிறைவேற்றுவோம்.
மதுரை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு, தற்போது பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் இடிக்கப்படும்போது அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களைச் சேர்த்து அமரவைத்து, கல்வி பயில வழிவகை செய்ய உள்ளோம். முதற்கட்டமாக திருச்சியில் 410 பள்ளிகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனை இடித்து பின்னர் பணிகளைத் தொடங்குவோம்.
பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுப்பணித் துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து குழுவாகப் பள்ளி கட்டடங்களை இடிக்கும் இந்தப் பணியில் செயல்பட்டு வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.