கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இதில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னரும் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதையடுத்து அதிமுக சார்பில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஏற்கெனவே ஆயிரக்கணக்கானோருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளனர்.
திருச்சி மாநகர அதிமுக உறையூர் பகுதி 59, 55, 55அ, 58, 58அ வட்டங்களுக்குட்பட்ட பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 1,000 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி உறையூர் ஏ.கே.கே.வி பள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.