தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆறு தான் எங்களுக்கு வழிப்பாதை: சேற்றில் சிக்கி பள்ளிக்குச் செல்லும் அவலம்

திருச்சி மாவட்டத்தில் முறையான வழிப்பாதை இல்லாமல் ஆற்றுப் பாதை வழியாக சேற்றில் சிக்கி தினமும் தங்கள் அன்றாடப் பணிக்குச் செல்லும் மக்கள் தங்களுக்கு சாலை வசதி அமைத்துத் தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பாயபுரம் ஊர் சாலை வசதி பிரச்சனை
ஆறு தான் எங்களுக்கு வழிப்பாதை: சேற்றில் சிக்கி பள்ளிக்குச் செல்லும் அவலம்

By

Published : Dec 8, 2021, 10:14 PM IST

திருச்சி: மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது, கரும்புளிபட்டி தெற்குகளம் (எ) குப்பாயபுரம் என்னும் ஊர். இவ்வூரில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

நான்கு தலைமுறைகளாக இங்கு வசித்து வரும் மக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கும், மருத்துவமனைக்கும், மற்ற அடிப்படைத் தேவைகளுக்கும் வெளியே செல்ல வேண்டுமானால் அருகேயுள்ள குப்பாய் மலையிலிருந்து ஆளிப்பட்டி குளத்திற்குச் செல்லும் ஆற்றுப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.

ஆற்றுப் பாதை

இந்நிலையில், மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பெய்த கனமழையால், அந்த ஆற்றுப் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் சேறும் சகதியுமான அந்த ஆற்றுப் பகுதியை, அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி கடந்து செல்ல வேண்டியுள்ளது.

சேற்றில் சிக்கி பள்ளிக்குச் செல்லும் அவலம்

மேலும், அப்பகுதியிலிருந்து பள்ளிக்குச் செல்லும் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினமும் ஆற்றில் உள்ள சேற்றில் மாட்டி, அவர்களின் சீருடை, புத்தகப்பை என அனைத்தும் சகதியாகிவிடுகின்றன.

இதனால் ஆற்றுப் பகுதியை கடந்த பிறகு, அங்கு இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியில் சீருடை மற்றும் புத்தகப்பைகளை கழுவிய பின்னரே பள்ளிக்குச் செல்லும் நிலை உள்ளது.

ஆறு தான் எங்களுக்கு வழிப்பாதை: சேற்றில் சிக்கி பள்ளிக்குச் செல்லும் அவலம்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நமது ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது, 'எங்கள் பகுதிக்குச் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பல ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம்.

மனு மீது பரிசீலனை செய்து இப்பகுதியில் சாலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்களே தவிர, இதுவரை அதற்கான பணி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அலுவலர்கள் யாரும் நேரில் வந்து பார்வையிடவில்லை' என வேதனைத் தெரிவித்தனர்.

ஆறு தான் எங்களுக்கு வழிப்பாதை: சேற்றில் சிக்கி பள்ளிக்குச் செல்லும் அவலம்

தமிழ்நாடு முதலமைச்சர் சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பள்ளிக் குழந்தைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சாலை வசதி இல்லை: மார்பளவு நீரில் உடலை சுமந்த அவலம்

ABOUT THE AUTHOR

...view details