திருச்சி மத்தியச் சிறையில் பாஸ்போர்ட் மற்றும் எந்த வித ஆவணங்கள் இல்லாமல் தமிழகத்தில் தங்கி உள்ள இலங்கைத் தமிழர்கள், மற்றும் வெளி நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் மோகனரூபன் என்பவர் ஆவணம் இல்லாமல் இருந்ததாகக் கடந்த மார்ச் மாதம் க்யூ பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டுச் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். வழக்கு முடிந்து, ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவித்த பின்னரும்தான் விடுவிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி கடந்த வாரம் சிறையிலேயே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.