திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி பேரவை கலந்துரையாடல் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி தலைவர் வீரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வீரமணி பேசுகையில், ”அமைப்புகளில் பெண்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும். அவர்கள் இத்தகைய பொறுப்புகளை ஏற்க தயாராக இருக்கிறார்கள். தொழிற்சங்கத்தை நம்பி பலர் கட்சி நடத்துகின்றனர். ஆனால் திராவிடர் கழகம் அப்படி இல்லை. திராவிடர் கழகம் அமைப்பு தனித்தன்மையானது. போனஸ், கூலி உயர்வு ஆகியவை கேட்டு மட்டும் திராவிடர்கள் தொழிற்சங்கம் போராடுவது கிடையாது.
தண்ணீர் பிரச்னை: சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: வீரமணி வலியுறுத்தல் - தண்ணீர் பிரச்சினையை தீர்க்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்
திருச்சி: தண்ணீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக வீரமணி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னால் அனைத்துக் கட்சி கூட்டத்தை அல்லது சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும். அதில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய வகையில் எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கவில்லையோ அங்கெல்லாம் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாதாரணமான ஊற்றுகளில் தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் தலையிட்டு தடுக்கிறார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. இவைகளையெல்லாம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், முதலமைச்சரும் தனி கவனம் செலுத்தி ஈடுபாட்டுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.