தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை - சட்டப்பேரவைத் தேர்தல்

செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை
செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை

By

Published : Apr 2, 2021, 11:51 AM IST

Updated : Apr 2, 2021, 2:25 PM IST

11:50 April 02

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் ராமேஷ்வரப்பட்டியில் உள்ள கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக தமிழ்நாட்டில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக, சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டிலும், அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகன் மகன் கார்த்திக் வீட்டிலும், சபரீசனின் நெருங்கிய நண்பர் ஜி ஸ்கொயர் பாலா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 

இதற்குத் திமுகவினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதிமுகவிலிருந்த விலகிய செந்தில் பாலாஜி 2018ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மு.க. ஸ்டாலின் மருமகன் வீட்டில் சோதனை

Last Updated : Apr 2, 2021, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details