திருச்சி: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க வந்த தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். பலத்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக தஞ்சை செல்வதற்கு முன்பு அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'கரோனா இன்னும் முழுமையாக போகவில்லை.
நீட் விவகாரத்தில் எதுவும் சொல்ல விரும்பவில்லை - தெலங்கானா ஆளுநர் தமிழிசை
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க திருச்சி வந்த தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், நீட் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அனைவரும் தடுப்பூசி போட்டு இருக்கிறோம்; இருப்பினும் 4ஆவது அலை வர உள்ளது. எனவே, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்குட்பட்டோரை அழைத்துச்சென்று தடுப்பூசி போட வேண்டும். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கிடைக்கும் பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளுங்கள். நீட் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை; அமைதியாக செல்ல விரும்புகிறேன்' என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார்.
இதையும் படிங்க:Video:அமைச்சரை வேறு துறைக்கு மாற்றியது தண்டனை ஆகாது - செல்லூர் ராஜூ 'பொளேர்' பேட்டி