கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. எனினும் அரசு ஊழியர்களுக்காக அரசு பேருந்துகளும், வெளிநாட்டில் சிக்கியிருந்த தொழிலாளர்களுக்காக ரயில், விமானங்கள் ஆகியவை இயக்கப்பட்டு வந்தன.
பொது போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இடையில் ஒரு சில நாட்கள் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக மீண்டும் கரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டதால் இடையில் அறிவிக்கப்பட்ட அனுமதியும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாளை (செப்.01) முதல் பொது போக்குவரத்து தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஆயத்த ஏற்பாடுகளை போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டுள்ளது.