தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆன்லைன் நெல் கொள்முதல் வேண்டாம்: சாலையில் படுத்து போராட்டம் - சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்

ஆன்லைன் நெல் கொள்முதல் சேவையை ரத்துசெய்ய வழியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே டிராக்டர்களை நிறுத்தி, சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம் செய்தனர்.

சாலையில் படுத்து போராட்டம்
சாலையில் படுத்து போராட்டம்

By

Published : Jan 31, 2022, 8:39 PM IST

திருச்சி: மணப்பாறை அருகேயுள்ள தெற்கு சேர்ப்பட்டியில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இணைய சேவை பாதிப்பால் கடந்த 25 நாள்களாகக் கொள்முதல் மையத்திலேயே நெல் குவியல்கள் தேங்கிக் கிடந்தன.

இது தொடர்பாக இரு நாள்களுக்கு முன்னதாக நெல் கொள்முதல் நிலையத்தினைப் பார்வையிட்டு ஆய்வுசெய்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சாலையில் படுத்து போராட்டம்

அதன் பிறகு இதுவரை அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ,ஆத்திரமடைந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மரவனூர் பகுதி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நெல் மூட்டைகளுடன் டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி, சாலையிலேயே சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போரட்டத்தில், ஆன்லைன் சேவையை ரத்துசெய்யவும், பழைய டோக்கன் முறையை நடைமுறைப்படுத்திடக் கோரியும் தரையில் படுத்து கோஷமிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போரட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: வரமான நீட்: வறுமையிலும் வென்று மருத்துவராகும் அரசுப்பள்ளி மாணவி!

ABOUT THE AUTHOR

...view details