தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’டெல்லி செல்வதை தடுத்ததால் அரை மொட்டை அடித்த விவசாயிகள்’ - திருச்சி

திருச்சி: டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தியதால் அரை மொட்டை அடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

protest
protest

By

Published : Nov 24, 2020, 1:34 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மரபணு மாற்ற விதைகளை தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26, 27 ஆகிய தேதிகளில் டெல்லியில் போராட்டமும், உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டு முன்பு உண்ணாவிரதமும் இருக்க, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்திருந்தது.

அதன்படி அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று ரயில் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டு, திருச்சி ரயில்வே நிலையத்திற்கு புறப்பட்டனர். பேரணியாக புறப்பட்டு திருச்சி-கரூர் பைபாஸ் சாலைக்கு வந்த அவர்களை, தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் தடுத்தனர். இதனால் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்த விவசாயிகள், திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரை மொட்டை அடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

’டெல்லி செல்வதை தடுத்ததால் அரை மொட்டை அடித்த விவசாயிகள்’

பின்னர் விவசாயிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர், அவர்கள் அனைவரையும் அய்யாக்கண்ணு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் முன் ஏராளமான காவல்துறையினர் இருக்க வைக்கப்பட்டு விவசாயிகள் வெளிவராதபடி தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சியில் காய்கறி விற்பனை செய்யப்படும் - சில்லறை வியாபாரிகள்!

ABOUT THE AUTHOR

...view details