திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் நீர் தலமாகும். இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அங்குள்ள குபேரலிங்கம் சன்னதியின் அருகில் உள்ள சுற்றுச்சுவர் புனரமைப்புப் பணிகளில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
திருவானைக்காவல் கோயிலில் பள்ளம் தோண்டியபோது சிவலிங்கம் கண்டெடுப்பு இந்நிலையில் நேற்று (பிப். 5) காலை பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது மண்ணுக்குள் புதையுண்டிருந்த 3 அடி உயரம் கொண்ட சிவலிங்கமும், 2 அடி உயரம் கொண்ட சிவலிங்கமும் கண்டெடுக்கப்பட்டன.
தகவலறிந்த அறநிலையத் துறை அலுவலர்கள், அர்ச்சகர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் விரைந்துசென்று சிவலிங்கத்தைப் பார்த்தனர். இந்தத் தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் திருவானைக்காவல் கோயிலுக்குப் படையெடுத்தனர்.
திருவானைக்காவல் கோயிலில் பள்ளம் தோண்டியபோது சிவலிங்கம் கண்டெடுப்பு புதிதாக கிடைக்கப்பெற்ற சிவலிங்கங்களை பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதேபோல் புனரமைப்புப் பணி நடந்தபோது தங்கக் காசுகள் அடங்கிய புதையல் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடிவரும் பழனி பஞ்சாமிர்தம்!