தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

திருச்சி: சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 24, 2019, 2:37 PM IST

மாநகராட்சி சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாநகரில் நிலவும் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும். தரை கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மரக்கடை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநகர் மாவட்ட பொருளாளர் முருகேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் திராவிட மணி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வகுமாரும், நிர்வாகிகள் சிலரும் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசுக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பகுதி குழு உறுப்பினர் மகரஜோதி நன்றி கூறினார்.

சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

இதைத்தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்களின் அடிப்படைப் பிரச்னையான குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களுக்கான நீராதாரங்களை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கழிவுநீர் ஓடைகளை உடனடியாக தூர்வார வேண்டும். சொத்து வரி உயர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும். கடைவீதி பகுதிகளில் உள்ள தரைக் கடைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுத்து, அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details