கரூர் மாவட்டத்தில்‘ தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் தங்களால் இயன்ற உதவிகளை பணமாகவும் மருத்துவ உபகரணங்களாகவும் வழங்கி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 80 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனமான ஆசியன் பேப்பிரிக்ஸ் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் அசோக் ராம்குமார் ரூபாய் 51 லட்சம் மதிப்பீட்டில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 22 கிலோவாட் கம்பரசர் கருவிகளை வழங்கினர்.
அரசு மருத்துவமனைக்கு குவியும் மருத்துவ உபகரணங்கள் - karur
கரூரில் 80 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனைக்கு குவியும் மருத்துவ உபகரணங்கள்
அதேபோல ரூபாய் 51லட்சம் மதிப்பீட்டில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 22 கிலோவாட் கம்பரசர் கருவிகளை வி செந்தில் பாலாஜி பவுண்டேசன் சார்பில் வழங்கப்பட்டது.
ஒரு கோடியே 2 லட்சம் மதிப்பிலான 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் 80 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையத்தை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.