இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள், தாங்கள் எடுத்து வந்த உடைமைகளில் ஆமைகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமைகள்! - கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமைகள்
திருச்சிராப்பள்ளி: இலங்கையில் இருந்து கடத்தி வந்த அரிய வகை ஆமைகள், விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது.
Turtles caught in trichy airport
அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆமைகளைக் கடத்தி வந்த இரு பயணிகளைக் கைது செய்து, அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.