தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் உட்பட 5 பேர் கைது! - Trichy Child Rape Case

திருச்சி: மணப்பாறை அருகே எட்டு வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக, சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Child Rape Case 5 Person's Arrested Under Pocso Act In Trichy
Child Rape Case 5 Person's Arrested Under Pocso Act In Trichy

By

Published : Aug 2, 2020, 11:29 PM IST

Updated : Aug 3, 2020, 4:51 PM IST

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது 15 வயது மகன் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த எட்டு வயது சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பரமசிவத்திடம் முறையிட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பரமசிவம், அவரது உறவினர்கள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிறுமி வீட்டாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து, திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சிறுவனின் பெரியப்பா மாரியப்பன், அவரது மகன்கள் சுப்ரமணி, ராஜா, நாகராஜ் உள்ளிட்ட நான்கு பேரையும் கைதுசெய்து துறையூர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Aug 3, 2020, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details