தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘சுதந்திர தினத்தை கச்சத்தீவில் கொண்டாட வேண்டும்’ - அர்ஜுன் சம்பத்

75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவில் கொண்டாடப்பட வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத்
செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத்

By

Published : Aug 8, 2021, 11:34 AM IST

திருச்சி:மணப்பாறை அடுத்த பழையக் கோட்டையிலுள்ள திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் ராஜா (எ) வீரசிகாமணியின் இல்ல விழா நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்து மக்கள் கட்சியின் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி பாரத நாடு துண்டாடப்பட்ட நாள், பத்து லட்சம் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த நாளில் ஒவ்வொரு வருடமும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பாரத மாதா வழிபாடு நடைபெறும்.

சுதந்திர தினத்தை கச்சத்தீவில் கொண்டாட வேண்டும்

இந்த ஆண்டு பாரத மாதா வழிபாடு தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, பாரத மாதாவிற்கு ஆலயம் அமைக்க வேண்டும் என ஒரு பெரும் முயற்சி எடுத்து சித்தரஞ்சன் தாசை கொண்டு வந்து அடிக்கல் நாட்டினார். அதை அமைப்பதற்கு குமரி அனந்தன் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களும், உள்ளூர் பிரமுகர்களும் பெருமை சேர்த்தார்கள்.

அதிமுக ஆட்சிக் காலத்திலே அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, இப்போது திமுக ஆட்சி காலத்தில் அந்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் அதை நினைவாலயம் என குறிப்பிட்டிருக்கிறார்கள். 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவில் கொண்டாடப்பட வேண்டும்.

சுதந்திர தின கொடியை தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பிலோ அல்லது கடலோர காவல் படையின் சார்பிலோ, ஒன்றிய அரசாங்கத்தின் சார்பிலோ ஏற்ற வேண்டும். சுதந்திர தினத்தை இந்திய அரசாங்கம் கச்சத்தீவில் கொண்டாட வேண்டும், கச்சத்தீவில் எங்களுக்கு உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சியை இந்து மக்கள் கட்சி நடத்த இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

தமிழில் அர்ச்சனை

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக இருந்தபோது தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றிருந்தது மாற்றப்பட்டு இப்போது புதிதாக அன்னை தமிழில் அர்ச்சனை என்பது திமுகவின் ஒரு விளம்பர யுக்தி. தமிழில் அர்ச்சனை செய்கிறவர்கள் தமிழிலிலும், விரும்புகிறவர்கள் அவரவர் தாய் மொழிகளிலும் அர்ச்சனை செய்து கொள்கிறார்கள். கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் தானே அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை இவர்கள் வந்தபிறகு சத்துணவு திட்டம் எனவும், அதன்பிறகு எம்ஜிஆர் சத்துணவு திட்டம் எனவும் மாறியது. அதுபோல்தான் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பதும் மாறியுள்ளது. ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். அந்த ஒரு கோடி இந்துக்களின் கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.

திமுக அரசாங்கத்தையே இன்று எதிரிகளுக்கு இடம் கொடுத்து தான் நடத்துகிறது. பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் லியோனியையும், தமிழ்நாடு பாடத்திட்ட அறிவுரை குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனையும் நியமித்திருக்கிறார்கள். இவர்கள் கருணாநிதி, அண்ணா, பெரியாரை பாடப்புத்தகத்தில் சேர்ப்போம் என்கிறார்கள். நாங்கள் ஆத்திச்சூடி, ஔவையார், கொன்றை வேந்தனை சேர்க்கை வேண்டும் என்கிறோம்.

அரசுக்கு வேண்டுகோள்

மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய ஸ்டேன் சாமியின் அஸ்தியை தமிழ்நாடு முழுவதுமுள்ள தேவாலயங்களில் வைத்துக் கொள்வோம், இனி கிறிஸ்தவர்களை கைது செய்ய வேண்டுமென்றால் போப்பிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று பேசிய திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மருமகள் மெர்சி போன்றவர்களிடம் திமுகவினரும், துர்கா ஸ்டாலின் குடும்பத்தினரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இதனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திமுகவினர் பெரியசாமி பேச்சைக் கேட்பதா, அவரது மருமகள் மெர்சியின் பேச்சைக் கேட்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர். ஸ்டேன் சாமி போன்றவர்களுக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.

செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத்

ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலய விழாக்களுக்கும், பக்ரீத் கொண்டாடத்திற்கும் அனுமதியளித்த தமிழ்நாடு அரசு ஆடி, அமாவாசை நாளன்று கோயிலில் கூட்டம் கூட தடை விதித்திருக்க கூடாது. டாஸ்மாக் கடைகளில் பரவாத கரோனா ஆடி திருவிழா கூட்டத்தில் பரவிடுமா. கரோனா விதிமுறைகளை பின்பற்றி கோயிலுக்குச் செல்ல அரசு அனுமதியளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஆடி சனிப் பிரதோஷத்தில் சிவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுங்கள்!

ABOUT THE AUTHOR

...view details