தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யோகாவில் 11 வயது மாணவி உலக சாதனை

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2022, 11:46 AM IST

திருச்சி: கும்மிடிப்பூண்டியை சேர்ந்த டி.சரவணன் - எஸ்.மலர்விழி தம்பதி மகள் டி.எஸ்.ஜோதிஷா (வயது 11). கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பாடசாலா பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.

கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஐந்து ஆண்டுகளாக யோகா பயின்று வருகிறார். இந்நிலையில் இவர், ஒரு நிமிடத்தில் 28 முறை கண்டபேருண்டாசனத்தில் இருந்து சக்கர பந்தாசனத்திற்கு மாறியதன் மூலம் உலக சாதனை படைத்தார்.

குடும்பத்துடன் டி.எஸ்.ஜோதிஷா

இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’ ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.

மாணவி டி.எஸ்.ஜோதிஷா

சாதனை படைத்த மாணவி ஜோதிஷா, அவரது யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை சக மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஒரு நிமிடத்தில் 28 முறை கண்டபேருண்டாசனத்தில் இருந்து சக்கர பந்தாசனத்திற்கு மாறியதன் மூலம் உலக சாதனை படைத்த 11 வயது பள்ளி மாணவி

இதையும் படிங்க: சாலை ஆக்கிரமிப்பால் மாணவி பலி: நெடுஞ்சாலைத் துறை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details