திருச்சி: 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 38 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ 19) அறிவித்த நிலையில் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இது குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாலும் முன்னரே சொன்னது போல் விவசாய விளைபொருள்களுக்கு இருமடங்கு விலை வழங்க வேண்டும் எனக் கூறினார்.