தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் இன்று(நவ.4) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தத் திரைப்பட வெளியீட்டை ரஜினி ரசிகர்கள் திருவிழாவை போல் கொண்டாடிவருகின்றனர். இதனிடையே, திருச்சியில் ஹோட்டல் நடத்தி வரும் ரஜினி ரசிகர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்துள்ளார்.
1 ரூபாய்க்கு ஒரு தோசை... - ரஜினி ரசிகர்
திருச்சியில் ரஜினி ரசிகர் ஒருவர் தனது ஹோட்டலில் 1 ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்துள்ளார்.
A dosa for 1 rupee in trichy
இதுகுறித்து அவர், 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, இந்த சலுகை வழங்கினேன். நேற்று ஒருநாள் மட்டுமே, இந்த விலைக்கு விற்பனை செய்தேன். இன்று தீபாவளி என்பதால் ஹோட்டலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொறி பறக்குதா? இணையத்தை கலக்கும் நெருப்பு தோசை