திருப்பூர்: பின்னலாடை நிறுவனம் ஒன்று, தங்கள் நிறுவனத்தில் பணிக்கு ஆள் சேர்க்க ஒட்டிய விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பின்னலாடை நகரான திருப்பூரில் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ஏற்றுமதியும், 18 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்றுவருகிறது. இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு தற்பொழுது ஆள் பற்றாக்குறை நிலவிவருகிறது. பணியாளர்கள் வேலைக்கு வந்தாலும் பாதி நாள்கள் பணிபுரிந்து திரும்பி வராத சூழல் நிலவுகிறது.
‘நேர்மை, வாய்மை, தூய்மை’ - காமராஜரின் வாழ்க்கைப் பயணம் ஓர் பார்வை!
இதனால் முன்னதாக பெறப்பட்ட ஆர்டர்கள் முடித்து தரமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இச்சூழலில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் பல நிறுவனங்களுக்கு போதிய ஆள்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பணம் அதிகம் வேண்டும் என்று பணியாளர்கள் பெற்றுக்கொண்டு, மதுபோதையில் வேலைக்கு வராமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.