அரசின் இலவச மடிக்கணினி, சென்ற வருடங்களில் படித்த முன்னாள் மாணவ - மாணவியருக்கு கொடுக்கப்பட்டதாக, பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் பதியப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை தங்களுக்கு மடிக்கணினி வழங்காமல், அலுவலர்கள் மெத்தனமாகச் செயல்படுவதாகக் கூறி பள்ளிகளுக்கு அருகிலுள்ள சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டும், பள்ளி வாயில்களில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடிக்கணினி கேட்டு, பள்ளி மாணவர்கள் சாலை மறியல்!
திருப்பூர்: உடுமலை, குமரலிங்கம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிவரும் நிலையில், சென்ற வருடம் பள்ளிப்படிப்பை முடித்த மாணவ மாணவியர் தங்களுக்கும் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மடிக்கணினிக் கேட்டு, பள்ளி மாணவர்கள் சாலை மறியல்!
தகவலறிந்து வந்த உடுமலை காவல்துறையினர் மாணவர்களிடம், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர். விரைவாக மடிக்கணினி கிடைக்க ஏற்பாடு செய்வதாக, அலுவலர்கள் உத்திரவாதம் அளித்ததைத் தொடர்ந்து மாணவ - மாணவிகள் கலைந்து சென்றனர்.