திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகரும், அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் 2090 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் தனபால் வழங்கினார். இதில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், இலவச மடிக்கணினிகள் இந்த கல்வியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை அறிந்த முன்னாள் மாணவர்கள், தங்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படாமல் இருப்பதைக்கூறி, சபாநாயகரை முற்றுகையிட முயன்றனர்.