திருப்பூர் மாநகர பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், காவல் துறையினரின் ரோந்து பயணங்களை துல்லியமாக கண்காணிக்கும் வகையிலும் புதிதாக மின்னனு ரோந்து செயலி எனப்படும் ஈ-பீட் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஈ-பீட் செயலி குறித்த விளக்கம்
இந்த செயலியை இன்று (ஆகஸ்ட் 18) மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், “திருப்பூர் மாவட்டம் வடக்கு, தெற்கு காவல் சரகத்திற்கு உட்பட்டு 23 ரோந்து பகுதிகள் உள்ளன. அவற்றை பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு காவல் அலுவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல் அலுவலர்கள் தங்களது பகுதியிலுள்ள வங்கிகள், ஏடிஎம் மையங்கள் , குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பட்டா புத்தகங்களில் கையொப்பமிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈ-பீட் செயலியை அறிமுகப்படுத்திய காவல் ஆணையர் இந்த சூழ்நிலையில் அவற்றை நவீனப்படுத்தும் வகையில், தற்போது மின்னனு ரோந்து செயலி (ஈ-பீட் செயலி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு உதவியாக இருக்கும் ஈ-பீட் செயலி
முக்கிய இடங்களில் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடினை, பொதுமக்கள் ஸ்கேன் செய்து புகார் அளித்தவுடன் எந்த இடத்திலிருந்து புகார் வந்துள்ளது என்பதை கட்டுப்பாட்டு அறையிலுள்ள காவல் துறையினர் கண்டறிந்து உடனடியாக அப்பகுதியில் இருக்கும் ரோந்து காவல் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
இதன் மூலம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும். காவல் துறையினர் பொறுப்புடன் பணி செய்தாலே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொல்லாதவன் பட பாணியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது