திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த நல்லகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணி(75). இவருக்கு கருப்பசாமி(51), மூர்த்தி(45) என இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் கருப்பசாமிக்கு திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் புளியம்பட்டியில் வசித்து வருகிறார். மூர்த்திக்கு திருமணம் ஆகாமல் தாயுடன் வசித்து வந்தார்.
அருக்காணி சர்க்கரை வியாதியால் கால்களில் காயம் ஏற்பட்ட பல்வேறு உபாதைகளை அனுபவித்து வந்தார். தாய்க்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே திருமணமே செய்து கொள்ளாத மூர்த்தி, அவிநாசியில் பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக மூர்த்தி காய்ச்சலால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.